Enable Javscript for better performance
மத்திய அரசு ரூ.10,000 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும்: தி.வேல்முருகன்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு ரூ.10,000 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும்: தி.வேல்முருகன்

    By நெய்வேலி,  |   Published on : 16th December 2016 08:18 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழகத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
     இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: வர்தா புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன. குடிநீர், மின்சாரம் விநியோகம், தொலைதொடர்பு என அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
     லட்சக்கணக்கான மரங்கள், 15,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், ஆயிரக்கணக்கான மின்மாற்றிகள், 3,000 மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டாலும், முழுமையாக சரிசெய்ய நெடுங்காலமாகும் என்பதே யதார்த்தம்.
     எனவே, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி அளிக்க வேண்டும். தமிழக அரசு கோரியுள்ள முதல் கட்ட தொகையான ரூ.1,000 கோடியை உடனடியாக அளிக்க வேண்டும். மேலும், புயலால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai