சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை விற்பனை

    By சிதம்பரம்  |   Published on : 16th December 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு தைப்பட்டத்தில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள, சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது என வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் சு.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆடுதுறை 5, ஐ.பி.யு. 94 ஆகிய உளுந்து ரக விதைகள், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் (பயறுவகை) 2016-17இல் ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இதே திட்டத்தில் ஆடுதுறை 3 ரகத்துக்கு, ஒரு கிலோவுக்கு ரூ.15 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. விதை கிராமத் திட்டம் 2016-17-ன்கீழ் உளுந்து விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த விதைகள், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் பின்னத்தூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விதை தேவை உள்ள விவசாயிகள், தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி, மானிய விலையில் சான்று பெற்ற விதைகளைப் பெற்று பயனடைய வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai