சுடச்சுட

  

  வீராணம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிட உழவர் முன்னணி கோரிக்கை

  By சிதம்பரம்,  |   Published on : 16th December 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக உழவர் முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
   மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் துணைச் செயலர் ரா.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் என்.ஜெயபாலன், அ.மதிவாணன், சி.ராஜேந்திரன், வே.பொன்னுசாமி, ஜி.நடனகுஞ்சிதபாதம், கி.ராஜராஜசோழன் உள்ளிட்டோர் பேசினர்.
   தீர்மானங்கள்: மாதந்தோறும் தமிழகத்துக்குரிய சட்டப்படியான காவிரி நீரைப் பெறத் தவறியதால், சம்பா பயிர் முற்றிலும் கருகிவிட்டது. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மீத்தேன் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாதவாறு, காவிரி ஆற்றுப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களிலேயே பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் முன்பு போல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், உளுந்து சாகுபடி செய்வதற்கு ஏற்ப வீராணம் ஏரி நீரை டிச.20 முதல் ஜன.10ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai