சுடச்சுட

  

  நெய்வேலியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
   வட்டம் 9இல் உள்ள பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில், ஜெயந்தீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாசிரியர் வசந்தம் மெர்சிலின் வரவேற்றார்.
   பள்ளி ஆயத்தப் பயிற்சி மைய ஆசிரியர் அமிர்தலிங்கம், உதவியாளர் லில்லி, ஆசிரியர்கள் மணிவண்ணன், சரவணன், செந்தில்குமார், சார்லஸ், வெங்கடேசன், அமலதெரஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக, மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சிறப்பாசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai