சுடச்சுட

  

  ஓய்வூதியர் மருத்துவப் படியை உயர்த்தக் கோரிக்கை

  By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின், கடலூர் மாவட்ட சிறப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
   கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார். சங்க அறிக்கையை பொதுச் செயலர் பாபுசுப்ரமணியன், வரவு-செலவு அறிக்கையை பொருளர் டி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ, முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேலு மற்றும் சங்க உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
   மேலும், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவிப்பது. தற்போது வழங்கப்படும் மருத்துவப் படியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக 8ஆவது ஊதியக்குழுவை அமைப்பது, ஓய்வூதியர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்துதல், அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ஜேக்கப், த.சண்முகசுந்தரம், ச.வேணுகோபால், ஆர்.முத்துக்குமரன், எஸ்.ஏ.தாஸ், ஆர்.திருநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   முன்னதாக துணைத் தலைவர் பி.விஸ்வநாதன் வரவேற்க, துணைச் செயலர் ஆர்.செந்தாமரைகண்ணன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai