சுடச்சுட

  

  கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது.
   வங்கக் கடலில் அண்மையில் உருவாகி கரையைக் கடந்த நடா, வர்தா புயல்களால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய மழை பெய்யவில்லை.
   இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
   எனினும் சிறிது நேரம் மட்டுமே மழை நீடித்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கடலூரில் மட்டும் 3.82 மி.மீ. மழை பதிவானது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai