சுடச்சுட

  

  கடலூரில் ரூ.3 கோடியில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம்: அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பு

  By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், ரூ.3 கோடியில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்கான திட்ட வரைவு, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
   கடலூர் மஞ்சக்குப்பத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், அண்ணா விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
   இங்கு அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் அரங்குகள் இருப்பதோடு, மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.
   எனினும், இறகுப் பந்து விளையாட்டுக்கான உள்விளையாட்டு அரங்கம் மட்டுமே உள்ளது.
   இதேபோல் அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்பட வேண்டுமென விளையாட்டு வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது,
   மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கிலும், பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
   இதன்படி 3 கட்டங்களாக, 12 மாவட்டங்களில் உள்விளையாட்டரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
   இந்த நிலையில், 4ஆவது கட்டமாக, கடலூரில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் அமைத்திட அரசு ஒப்புதல் அளித்தது. அதற்காக ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கியது. அதன்படி, தற்போது உள் விளையாட்டரங்கம் அமைத்திட திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. அதில், அனைத்து வசதிகளுடன் கூடிய அரங்கம் அமைத்திட ரூ.3 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டதோடு, அதனை அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
   இந்த திட்ட வரைவு, அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
   பல்நோக்கு உள்விளையாட்டரங்கானது, 50மீ நீளம், 30மீ அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.
   இந்த அரங்கானது, இறகுப் பந்து, கைப்பந்து, கையுந்துப் பந்து, கபடி, சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுகள் மற்றும் யோகா பயிற்சிக்கான வசதிகளுடன் அமைக்கப்படும்.
   உள்விளையாட்டு அரங்கத்துக்கான அனுமதியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அரசை வலியுறுத்திப் பெற்றுத்தர வேண்டுமெனவும், இப்பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   தற்போது, விளையாட்டரங்கு வளாகத்தில், ரூ.1.50 கோடியில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவது
   குறிப்பிடத்தக்கது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai