சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    By சிதம்பரம்,  |   Published on : 17th December 2016 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், கரும்பு நிலுவைத் தொகை ரூ.32 கோடியை வழங்க வேண்டும் எனக் கோரி, அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் கு.தேவதாஸ் படையாண்டவர் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் நல சங்கச் செயலர் சிட்டிபாபு, கரும்பு விவசாய முன்னேற்றச் சங்கத் தலைவர் முத்துசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாய முன்னேற்றச் சங்கச் செயலர் தங்க.ஆனந்தன் வரவேற்றார்.
     ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். கடந்த காலங்களில் 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆலையில் லாபம் ஈட்டப்பட்டு, அந்த லாபத்திலும் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கும் அளவுக்கு அரவை செய்யப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வெட்டி அனுப்பப்பட்ட கரும்புக்கு பணம் வழங்கப்படாமல் விவசாயிகள்
     பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே கரும்பு பயிரிட்டும், அதற்குரிய பணமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மொத்தம் ரூ.32 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளது என்றார்.மேலும், புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன் பேசினார்.
     ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சபாநாயகம், மதியழகன், ராயர், திருமாவளவன், மாமல்லன், சோழன், செல்வராஜ், பாலு, முத்துராமலிங்கம், வெங்கடேசன், பாபு, வைத்தியநாதசாமி, வேல்முருகன், ராமசாமி, ராமதாஸ், பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதியழகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai