சுடச்சுட

  

  கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: மாணவிகள் உள்பட 12 பேர் காயம்

  By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திட்டக்குடி அருகே லாரி மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில், மாணவிகள் உள்பட 12 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
   பெண்ணாடம் சிமென்ட் ஆலையிலிருந்து, சிமென்ட் மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி, திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. லாரியை தருமபுரி மாவட்டம், குண்டகொலியைச் சேர்ந்த டி.மகேந்திரன் (34)
   என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையைக் கடந்த நாயின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை திடீரென நிறுத்தியுள்ளார்.
   அப்போது, விருத்தாசலத்திலிருந்து பெரம்பலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, நிறுத்தப்பட்ட லாரியின் பின்புறம் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு, லாரியின் பின்பகுதி சேதமடைந்தது.
   விபத்தில், விருத்தாசலத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் மா.ரம்யா (31), மாணவிகள் பெண்ணாடம் ர.மோனிஷா (18), விருத்தாசலம் பா.இந்திரா (19), ரா.தீபா (19), ஆ.வேல்விழி (19), த.தமிழரசி (20) உள்பட 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ரம்யா, தீபா ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
   விபத்து குறித்து ஆவினங்குடி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai