சுடச்சுட

    

    தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டா அளிக்க வேண்டும்: ஆட்சியர்

    By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டா அளிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கூறினார்.
     மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து, வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பட்டா மாறுதல், நிலவரி உள்ளிட்ட வசூல் பணிகள், கணினி மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், நீதிமன்ற வழக்குகள் நிலுவை முதலான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் பேசுகையில், பட்டா வழங்கும்போது, பயனாளிகளின் உண்மைத் தன்மை அறிந்தும், விதிமுறைகளின்படியும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
     மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் கோப்புகளின் மீது விதிமுறைகளின்படி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில் சார் ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஜெ.சண்முகம் (பொது), டி.செல்வராஜ் (நிலம்), வருவாய் கோட்டாட்சியர்கள் எஸ்.விஜயலட்சுமி, எம்.செந்தில்குமார், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai