சுடச்சுட

    

    தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நிவாரண உதவி வழங்கினர்.
     குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி அடுத்துள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது கூரை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
     அப்போது, மாவட்ட பொருளர் துரை.மருதமுத்து, மாநில நிர்வாகிகள் பெ.பாவாணன், ஜான்சன், சரண், தொகுதிச் செயலர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலர் அன்பு, கோவேந்தன், அமைப்பாளர் சதீஷ், நகர துணைச் செயலர் பூபாலன், தமிழ்சுடர், மாயவன், கிஷோர், பாண்டியன், இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai