சுடச்சுட

    

    தேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவிக்குப் பாராட்டு

    By நெய்வேலி,  |   Published on : 17th December 2016 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு, கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தேக்வாண்டோ போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 43-46 எடைப் பிரிவில் பங்கேற்ற, வடலூர் ஏரீஸ் மகளிர் கல்லூரி மாணவி எல்.ஜெயப்பிரியா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரித் தலைவர் சி.டி.அறிவழகன் நினைவுப் பரிசு வழங்கிப் (படம்) பாராட்டினார். கல்லூரி முதல்வர் ச.தியாகராசன், வணிகவியல் துறைத் தலைவர் சு.ஜானகி, பயிற்றுநர்கள் சையத், விஜயசங்கர், பெரியசாமி உள்ளிட்டோரும் மாணவியைப் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai