Enable Javscript for better performance
நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தில் டிச.29-இல் சிறப்பு மனுநீதி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தில் டிச.29-இல் சிறப்பு மனுநீதி முகாம்

    By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:24 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் வட்டம், நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தில் வருகிற 29ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
     இதனை முன்னிட்டு அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், வரும் 20ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது. இதில், அரசின் பல்வேறு உயர் அலுவலர்கள் பங்கேற்று மனுக்களைப் பெறுகின்றனர். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் மனுநீதிநாள் முகாமில் தெரிவிக்கப்படும்.
     முகாம் நடைபெறும் நாளன்று மருத்துவ முகாம், திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச் சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சியும் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai