சுடச்சுட

    

    பல்கலை. முறைகேடு மீது விசாரணை: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

    By கடலூர்,  |   Published on : 17th December 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இப்பல்கலைக்கழகத்தை அரசுடமை ஆக்கினார். ஆனால் தற்போது நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. புதிய ஏஜெண்டுகள் தோன்றியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு விரும்பிய இடங்களுக்கு ஆசிரியர், ஊழியர்களுக்கு பணி மாறுதல் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
     பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம், கடந்த ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் மேலாக ஈட்டித் தந்துள்ளது. தற்போது அந்த துறையை தனியாருக்கு தாரை வார்த்து, வருமானத்தை எடுத்துச் செல்லும் முறைகேடு நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை சீரமைக்க நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும். மேலும், இதுவரை நடைபெற்றுள்ள தவறுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai