சுடச்சுட

    

    பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு

    By சிதம்பரம்,  |   Published on : 17th December 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
     இந்திய தபால் துறை சார்பில், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதும் போட்டி கடந்த அக்.23ஆம் தேதி சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
     கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இடையே, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆகர்ஷனா, கிருத்தகபிரியா ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். மேலும் மாணவி ஹரிணி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
     போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தபால் துறை சார்பில் முதல் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.500 வீதம் ரொக்கமாக வழங்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார், முதல்வர் ஏ.ரூபியாள்ராணி, துணை முதல்வர் டி.லட்சுமணன் (படம்) ஆகியோர் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai