சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி, திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
   குறிஞ்சிப்பாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை சார்பில், "ஊழலை ஒழிப்பதில் பொதுமக்களின் நேர்மையும், ஒத்துழைப்பும்' என்ற தலைப்பில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் வி.விஜயலட்சுமி, ராம் நிவாஸ், ராணி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு, வங்கிக் கிளை மேலாளர் ஏ.விஜயமங்கையர்கரசி சான்றிதழ்கள் மற்றும் நூல்களை வழங்கினார்.
   கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளர் டி.ராமலிங்கம், புல முதல்வர் என்.சேரமான், முதல்வர் பி.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்த் துறைத் தலைவர் பா.சிவபாலன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai