Enable Javscript for better performance
வாகனம் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாகனம் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநர் சாவு

    By நெய்வேலி,  |   Published on : 17th December 2016 08:06 AM  |   அ+அ அ-   |    |  

    நெய்வேலி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அரசுப் பேருந்து நடத்துநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     திருவாரூர் மாவட்டம், மேலப்பள்ளி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). அரசுப் பேருந்து நடத்துநர். இவர், மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கும்பகோணம் கோட்ட அரசுப் பேருந்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். வியாழக்கிழமை இரவு, நெய்வேலி இந்திரா நகரில் அரசுப் பேருந்து நின்றபோது, நடத்துநர் வெங்கடேசன் கீழே இறங்கி, அப்பகுதியில் சாலையைக் கடந்துள்ளார்.
     அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். இதையடுத்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai