சுடச்சுட

  

  திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியவரை போலீஸார் கைது செய்தனர்.
  விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழக்குடி புதுகாலனியைச் சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் ராமதாஸ் (26). சென்னையில் துரித உணவகத்தில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்தாராம்.
  அவரிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கி பழகினாராம். இதில் அப்பெண் கர்ப்பமடைந்தார்.
  இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் வலியுறுத்தியபோது, ராமதாஸ் மறுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
  இதுகுறித்து அப்பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராமதாஸை கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai