சுடச்சுட

  

  கடலூரில் தீ விபத்தில் குடிசை வீடு சனிக்கிழமை சேதமடைந்தது.
  கடலூர் சாவடி குயவர் தெருவைச் சேர்ந்தவர் கூத்தாண்டவர் மகன் மோகன் (32). இவர் சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது வீட்டின் மேல்பகுதி திடீரென தீப்பிடித்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள், மோகன் குடும்பத்தினரை வெளியேற்றிவிட்டு, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
  எனினும் வீடு எரிந்து சேதமடைந்தது. வீட்டிலிருந்த பீரோ, கட்டில், ஆடைகள், குடும்ப அட்டை உள்ளிட்ட பொருள்களும் எரிந்தன. சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai