சுடச்சுட

  

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 18th December 2016 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
  ஓய்வூதியம் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியமே என்று அரசியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் கடந்த 1982ஆம் ஆண்டு டிச.17-இல் அளித்தத் தீர்ப்பில் தெரிவித்தது. அந்த நாள் ஓய்வூதியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  அதன்படி கடலூரில் ஆட்சியரின் பழைய அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நீதித் துறை, பொதுத் துறை, மத்திய-மாநில அரசுகளின் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கோ.பழனி தலைமை வகித்தார்.
  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.மருதவாணன், பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் எஸ்.ஆறுமுகம், டி.வெங்கடாசலம், டி.புருஷோத்தமன், த.கண்ணன், பி.கே.ரமணி, என்.காசிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.
  கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், 7ஆவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகளை நீக்கி அமல்படுத்துதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,500 ஓய்வூதியம் வழங்குதல், கடலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்குதல், அனைத்து ஓய்வூதிய பணப் பலன்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டமைப்பின் பொருளர் வி.சுந்தரராஜன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai