சுடச்சுட

  

  முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் ஏழைகள் அதிகளவில் பயனடைந்துள்ளனர் : கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ

  By DIN  |   Published on : 18th December 2016 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால், ஏழை மக்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர் என கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ கூறினார்.
  சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை வகித்தார்.
  முகாமை, சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியது: வளர்ந்த நாடுகளுக்கு இணையான
  சுகாதாரத் தரத்தை, தமிழ்நாடு அடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தாய்-சேய் நலனை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதியிலேயே சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா புதிய ஆரம்ப சுகாதார மையங்களை தொடங்கி வைத்துள்ளார்.
  அவரால் அமல்படுத்தப்பட்ட, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1,016 வகையான சிகிச்சைகள், 23 முக்கிய பரிசோதனைகள் மற்றும் 113 தொடர் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் மருத்துவ தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றார்.
  முகாம் தொடக்க விழாவில், ஒன்றியச் செயலர் பி.அசோகன், அவைத் தலைவர் கோ.வி.ராசாங்கம், கதர்வாரிய முன்னாள் உறுப்பினர் தன.ஜெயராமன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் சிவ.சிங்காரவேல், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ஜெயபால், நிர்வாகிகள் தன.பாண்டியன், முனுசாமி, ராமு, ஆர்.வி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  மருத்துவ அலுவலர்கள் பிரதீப், அருள்ராஜ், முத்துசுப்பிரமணியன், பிரபா, சரண்யா, மிதிலைராஜ், தீபக், பிருந்தா, அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவர் ராகேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கிள்ளை மருத்துவ அலுவலர் பிரதீப் நன்றி
  கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai