சுடச்சுட

  

  நெல்லிக்குப்பம் அருகே வங்கியில் பணம் இல்லாததால், பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  நெல்லிக்குப்பம் அடுத்துள்ள கீழ்பட்டாம்பாக்கத்தில், அரசுடமையாக்கப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை காலை பணம் எடுப்பதற்காக திரளானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, வங்கியில் பணம் இல்லை எனவும், மதியம் 1 மணிக்கு மேல் நபருக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.
  இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் வங்கிக்கு வந்தார். இதனையடுத்து முற்றுகையிட்டவர்கள், கடலூர்-விழுப்புரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
  இவர்களிடம் நெல்லிக்குப்பம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். வங்கி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai