சுடச்சுட

  

  வாகன விற்பனையில் சேவைக் குறைபாடு: வட்டியுடன் பணத்தை திரும்ப வழங்க உத்தரவு

  By DIN  |   Published on : 18th December 2016 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாகன விற்பனையில் சேவைக் குறைபாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வாடிக்கையாளருக்கு வட்டியுடன் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என கடலூர் நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.
  நெய்வேலி அருகே உள்ள வடக்கு வெள்ளூரைச் சேர்ந்தவர் பி.முருகன். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு கடலூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், பேட்டரியால் இயங்கும் இருசக்கர வாகனத்தை ரூ.47,396 விலை கொடுத்து வாங்கினாராம்.
  ஆனால், வாங்கிய அன்றே வாகனம் பாதி வழியில் நின்றதாகவும், அடுத்த சில நாள்களிலும் பழுது ஏற்பட்டதாகவும், பழுதினை சரிசெய்வதில் நிர்வாகம் காலதாமதம் செய்ததாகவும் கூறி முருகன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் மூலமாக கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
  இந்த வழக்கின் விசாரணை மன்றத் தலைவர் எம்.மோனி, உறுப்பினர் பி.எழிலரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக குறைதீர் மன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
  அதில், தனியார் நிறுவனம் சேவைக் குறைபாட்டுடன் செயல்பட்டுள்ளதால், முருகன் அளித்த பணத்தை 9 சதவீத வட்டியுடன் திரும்ப அளிக்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு உள்படுத்தியதற்கு ரூ.3 ஆயிரமும், வழக்குச் செலவாக ரூ.ஆயிரமும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai