சுடச்சுட

  

  சிதம்பரம் அருகே விவசாயி டிராக்டரை, தனியார் நிதி நிறுவன அலுவலர்கள் சனிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனர். விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால் திரும்பிச் சென்றனர்.
  சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (40). விவசாயியான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
  இவர், 4ஆவது மாதத் தவணை கட்டத் தவறியதாகக் கூறி, தனியார் நிதிநிறுவன அலுவலர்கள் சனிக்கிழமை டிராக்டரை ஜப்தி செய்ய வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.பி.ரவீந்திரன் மற்றும் விவசாயிகள், சம்பவ இடத்துக்கு வந்து தனியார் நிதி நிறுவன அலுவலர்களை முற்றுகையிட்டனர். டிராக்டரை ஜப்தி செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.
  அப்போது, ஏ.பி.ரவீந்திரன் கூறுகையில், கர்நாடக அரசு காவிரியில் போதிய தண்ணீர் திறந்துவிடாததாலும், மழை இல்லாததாலும் பயிர்கள் கருதி விவசாயிகள் கடும் நஷ்டத்தில் உள்ளனர். ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னையால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் விவசாயி டிராக்டரை ஜப்தி செய்யக் கூடாது என்றார்.
  இதையடுத்து நிதி நிறுவன அலுவலர்கள், டிராக்டரை ஜப்தி செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai