சுடச்சுட

  

  கூட்டுறவு வங்கிகளை செயல்படுத்த நடவடிக்கை தேவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

  By கடலூர்,  |   Published on : 19th December 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூட்டுறவு வங்கிகளை செயல்படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
   இந்த சங்கத்தின் கடலூர் மாவட்டக்குழு கூட்டம் சிதம்பரத்தில் மாவட்டத் தலைவர் கோ.மாதவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
   கூட்டத்தில், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். வீராணம், பெருமாள் ஏரி, வெலிங்டன் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியுள்ளன. எனவே நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
   உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் முடங்கிப்போன கூட்டுறவு சங்கங்களை செயல்படுத்தவும், பயிர்க் கடனை கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஊற்று நீரை கான்சாகிப் வாய்க்காலுக்கு கொண்டு செல்லும் திட்டம் மற்றும் அருவாமூக்கு திட்டங்களை செயல்படுத்துவதோடு, வீராணம் ஏரியை தூர்வாருவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
   சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு என்எல்சி தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் உருவாக்குதல், கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம், மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் தடுப்பணை கட்டுதல் ஆகிய திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.எஸ்.மகாலிங்கம், கே.தனபால், ஆர்.ராஜேந்திரன், எல்.ஜீவா, எம்.மூர்த்தி, ஜி.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai