சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றதாக இளைஞர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.
   விருத்தாசலம் ரயில்வே சாலையில் அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் இரவில் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயிலின் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு விழித்தெழுந்தவர்கள், உண்டியலை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து, விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த மாயவன் மகன் முத்து (28) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து முத்துவை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai