சுடச்சுட

    

    சாலை விபத்தில் விவசாயி படுகாயம்: காவல் துறையைக் கண்டித்து மறியல்

    By கடலூர்,  |   Published on : 19th December 2016 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் அருகே மாட்டுவண்டி மீது வேன் மோதியதில், விவசாயி படுகாயமடைந்தார். தகவல் தெரிவித்தும் காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வரத் தாமதமானதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     பரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (55), விவசாயி. இவர், தனது மாட்டு வண்டியில் விருத்தாசலத்திலிருந்து உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு, பரவலூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அவ்வழியாகச் சென்ற வேன், மாட்டு வண்டி மீது மோதியது. இதில் சக்திவேல் காயம் அடைந்தார். ஒரு மாடும் இறந்தது. இதையடுத்து, வேனை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் தப்பியோடினார்.
     இதுகுறித்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு சக்திவேலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் போலீஸார் நிகழ்விடத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாட்டுவண்டியையும், வேனையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
     மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai