சுடச்சுட

    

    சிறப்பு எஸ்.ஐ.க்கள் உள்பட 12 காவலர்கள் இடமாற்றம்

    By கடலூர்,  |   Published on : 19th December 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 12 காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
     மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவலர்களில் சிலர் மீது கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் விசாரணை நடத்தினார். இதனடிப்படையில் கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், ரெட்டிச்சாவடி, கடலூர் துறைமுகம் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றிய 12 பேரை இடமாற்றம் செய்து ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இவர்களில் 4 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 8 பேரும் தலைமைக் காவலர்களாவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai