சுடச்சுட

  

  கிள்ளை பகுதியில் தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை நிவாரணம் வழங்கினார்.
   சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பேரூராட்சியில் வசிக்கும் பத்மா என்பவரின் குடிசை வீடு, சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதனை அறிந்த கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார்.
   அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் கோ.வி.ராசாங்கம், பொருளர் கருணாநிதி, முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தன.ஜெயராமன், முன்னாள் ஒன்றியச் செயலர் கனகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கர்ணா, தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கார்த்திகேயன், ஆர்.வி.சுவாமிநாதன், நிர்வாகிகள் ஆறுமுகம், கோதண்டம், மாரிமுத்து ஆகியோர் இருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai