சுடச்சுட

    

    தேசிய அறிவியல் கண்காட்சி: சிதம்பரம் மாணவிக்குப் பாராட்டு

    By சிதம்பரம்,  |   Published on : 19th December 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல் விருதுக்கான  கண்காட்சி, புதுதில்லியில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.பூஜா பங்கேற்றார்.
     அவர், "பாதுகாப்பான பட்டாசுத் தொழிலகம்' என்ற தலைப்பில் காட்சிப் பொருளை அறிவியல் கண்காட்சியில் நிறுவியிருந்தார். பட்டாசு தொழிலகங்களில் தீவிபத்தால் ஏற்படும் பெரும் உயிர்சேதங்களையும், பொருட்சேதங்களையும் தவிர்ப்பதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் காட்சிப்பொருளை அமைத்திருந்தார். தேசிய கண்காட்சியில் பங்கேற்ற மாணவி எஸ்.பூஜா மற்றும் வழிகாட்டி ஆசிரியர் என்.சுரேஷ்குமார் ஆகியோரை கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ர.பாலமுரளி பாராட்டினார்.
     மேலும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ரவிசங்கர், நிர்வாகிகள் ஆர்.ராமநாதன், ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மாணவி பூஜாவை பாராட்டி பரிசு வழங்கினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai