சுடச்சுட

    

    மணிலா பயிரை சேதப்படுத்தியாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.
     கடலூர் அருகே உள்ள சேடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரா.தனசேகர் (35). இவர், நாகம்மாபேட்டையில் உள்ள விவசாய நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இவரது வயலுக்குள் நுழைந்த 2 பேர், பயிர்களை மிதித்து சேதப்படுத்தியவாறு சென்றனராம். அவர்களை தனசேகர் தட்டிக்கேட்டபோது, மதுபோதையில் இருந்த இருவரும் அவரைத் தாக்கி காயப்படுத்தினராம்.
     இதுகுறித்து தனசேகர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சாபுலி மகன் கோபி (18), மகாலிங்கம் மகன் வினோத் (19) ஆகியோரை கைதுசெய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai