சுடச்சுட

  

  கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   பிரிசன் மினிஸ்டரி இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி தலைமை வகித்தார். விழாவில், சிறைவாசிகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மேலும் பட்டிமன்றம், நாடகம், நடனம், ஆங்கில உரை மற்றும் கடலூர் புனித.அன்னாள் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
   அதனைத் தொடர்ந்து சிறை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் பிளமிங், ஹவுசிங் ரிப்பேர் மற்றும் சர்வீஸ், பேஷன் டிசைனிங் மற்றும் கார்மென்ட்ஸ் மேக்கிங் ஆகிய தொழிற்படிப்புகள் பயின்ற 23 தண்டனை சிறைவாசிகளுக்கு பட்டயச் சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற சிறைவாசிகள் கார்த்திகேயன், தரணிதேவன், அழகு என்ற அழகர் ஆகியோருக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை சிறைக் கண்காணிப்பாளர் வழங்கினார். கடலூர், விழுப்புரம் மறை மாவட்டப் பொருளர் அருள்தாஸ், அருட்சகோதரிகள் லூர்துமேரி, தேவாசீர்மேரி, சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முதல்நிலை காவலர் மா.பாஸ்கரன் தொகுத்து வழங்கினார்.
   முன்னதாக துணை சிறை அலுவலர் ஏ.வாசுதேவன் வரவேற்க, காவலர் சி.விநாயகம் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai