சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி அருகே தனியார் ஐடிஐ நிறுவன வளாகத்தில் மயங்கி விழுந்த ஆசிரியர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
     குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன்குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் கோ.நடராஜன் (43). பொட்டவெளியில் உள்ள தனியார் ஐடிஐ நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை வழக்கம்போல் பணி முடிந்து மாலையில் வீட்டுக்குப் புறப்பட்டவர், திடீரென ஐடிஐ வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
     உடனடியாக அவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சசிகலா (28) கொடுத்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai