Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் நீட்டிப்பு

    By சிதம்பரம்,  |   Published on : 20th December 2016 05:10 PM  |   அ+அ அ-   |    |  

     

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், கடந்த 15 ஆண்டுகளாகப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை பெறுவதற்காக நடைபெற்று வரும் அம்மா திட்ட நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம், வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்துள்ளார்.
     இந்தப் பல்கலைக்கழகத்தின் தேர்வுத் துறையில், தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களில் பலர் மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றுகளைப் பெறாமல் உள்ளனர். அத்தகைய நிலுவைச் சான்றிதழ்களை வழங்குவதற்கான அம்மா திட்ட சிறப்பு முகாம், பல்கலைக்கழக தேர்வுத் துறையில் கடந்த டிச.9ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
     முகாமில், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று, நிலுவைத் தொகையைச் செலுத்தி சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
     முகாமில், பல்கலை. துணைவேந்தர் செ.மணியன் பங்கேற்றுப் பேசுகையில், இந்த முகாம் டிச.31-ஆம் தேதி வரை, பல்கலைக்கழக வேலை நாள்களில் மட்டும் தேர்வுத் துறையில் தொடர்ந்து நடைபெறும். இந்த வாய்ப்பை தொலைதூரக் கல்வி இயக்கக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
     நிகழ்ச்சியில், பதிவாளர் கே.ஆறுமுகம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் கானூர் பாலசுந்தரம், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி ராம.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai