சுடச்சுட

    

    அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில், காலிப் பணியிடங்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளன.
     இதன்படி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படுகிறது. மேலும், அரசு காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி, அரசு பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில், தலா ஒரு இரவுக் காவலர் பணியிடம், காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளிகளில் தலா ஒரு சமையலர், ஆயா பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
     இந்தப் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35, அனைத்து விதவைகள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
     மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் வரும் 27ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல, கடலூர் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு இனசுழற்சி அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே நிரப்பப்படுகிறார்கள். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
     தகுதியுடையோர் உரிய விவரங்களை, "மீன் துறை உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக வளாகம், கடலூர் முதுநகர்-607 003' என்ற முகவரிக்கு வருகிற 26ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai