சுடச்சுட

  

  ஆளில்லா ரயில்வே கேட்டை மூடுவதை எதிர்த்து தர்னா

  By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆளில்லா ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
   விருத்தாசலத்தை அடுத்த இருப்புக்குறிச்சியில் இருந்து குப்பநத்தம் செல்லும் சாலையின் குறுக்கே, ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது.
   இந்த வழியாக குப்பநத்தம், நல்லூர், புதுக்கூரைப்பேட்டை, அகரம், எடக்குப்பம், விருத்தகிரிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
   இந்த நிலையில் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக தகவல் பரவியது.
   இதையறிந்த இருப்புக்குறிச்சி கிராமத்தினர் திங்கள்கிழமை ரயில்வே கேட் முன் அமர்ந்து திடீர் தர்னாவில் ஈடுபட்டனர். ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
   தகவலறிந்த விருத்தாசலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாசலம் இருப்புப் பாதை பொறியாளர் பிரசாத் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
   மக்களின் கருத்தை மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்து மாற்றுவழி ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
   தொடர்ந்து ரயில்வே கேட்டை மூடும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai