சுடச்சுட

    

    உலக நன்மை வேண்டியும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், சிதம்பரம் அண்ணாமலைநகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     அமைப்பின், மாவட்ட பொருளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். அரியக்குடி முத்தையன் வரவேற்றார். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, வேள்வியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலர் ரா.செந்தில்குமார், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற வட்டத் தலைவர் டி.எஸ்.எஸ்.பாலக்குமார், மயூர பிரபாகரன், சரஸ்வதி, லதா, கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காளிமுத்து நன்றி கூறினார். விழாவில் ஆடைதானம் வழங்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai