சுடச்சுட

    

    எரியாத தெரு விளக்குகள்: பிடிஓ அலுவலகம் முற்றுகை

    By சிதம்பரம்,  |   Published on : 20th December 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குச்சூர் கிராமத்தில் எரியாத தெரு விளக்குகளை சரிசெய்யக் கோரி, காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
     காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது குச்சூர் கிராமம். இங்கு பல மாதங்களாக தெரு மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் கிராமமே இருளில் முழ்கியுள்ளது எனக்கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சரிவர வேலை கொடுப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
     இதையடுத்து, கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி அதிகாரி சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மின் விளக்குகள் சீரமைப்புப் பணி மற்றும் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை தாற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai