சுடச்சுட

  

  கால்வாயை தூர்வார வேண்டுமென பல்லவராயநத்தம் கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   பண்ருட்டி வட்டம், பல்லவராயநத்தம் கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு: பல்லவராயநத்தம் கிராமத்தில் சுமார் 650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தினர் முக்கியச் சாலைக்குச் செல்லும் வழியில் நீர்நிலை வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்துதான் ஊருக்குள் செல்ல முடியும்.
   இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால், அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கட்டு வழியாக ஆற்றங்கரைக்கு தண்ணீர் செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
   எனவே திருவதிகையிலிருந்து கீழ்அருங்குணம் அணைக்கட்டு வரை 17 கிமீ தூரம் கால்வாயை தூர்வார வேண்டும். இதன்மூலம் விவசாய நிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் தண்ணீர் தேங்குவதிலிருந்து காப்பாற்றப்படுவதோடு, அணையின் நீர்மட்டமும் உயரும். எனவே மக்களின் வாழ்வாதாரம் கருதி கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai