சுடச்சுட

  

  கூட்டுறவு சங்கத்தில் புதிய பயிர்க் கடன் வழங்க பாமக வலியுறுத்தல்

  By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூட்டுறவு சங்கங்களில் புதிய பயிர்க் கடன் வழங்கப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியுள்ளது.
   அக்கட்சியின் விருத்தாசலம் கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம், புதுக்கூரைப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார் தலைமை வகிக்க, மேற்கு மாவட்டச் செயலர் இ.கே.சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில மருத்துவரணி நிர்வாகி தமிழரசி ஆதிமுலம் சிறப்புரையாற்றினார்.
   கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரூபாய் நோட்டு பிரச்னையால் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிதாக பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
   கரும்பு விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவியிடங்களிலும் போட்டியிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   நிர்வாகிகள் சிலம்புசெல்வி, கோவி.கந்தவேல். கே.என்.கலிபெருமாள், கார்த்திக், அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலர் ஜானகிராமன் வரவேற்க, நகரத் தலைவர் குணசேகரன் நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai