சுடச்சுட

  

  கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் தொழிற்சாலை செயலர் குழந்தைவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ரிச்சர்ட் தேவநாதன் முன்னிலை வகிக்க, நகரச் செயலர் த.ஆனந்த் வரவேற்றார்.
   கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், மத்திய தொழிலாளர் திறன் மேம்பாட்டு நிதியிலிருந்து, தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்ததை உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். தொழிற்சாலையில் பணியின்போது விபத்து ஏற்பட்டால் பாதிப்படையும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை நிர்வாகம் அளிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து ஆணையிட வேண்டும். மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
   மாநில தொழிற்சங்கச் செயலர் ஜம்புலிங்கம், சைதை சிவராமன், மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, துணை பொதுச் செயலர் உ.கண்ணன், இளைஞரணி செந்தில், மாணவரணி அருள்பாபு, இளம்புயல் பாசறை கமலநாதன், மகளிரணி அமராவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai