சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் சுதீஷ் ஆஜர்

    By கடலூர்,  |   Published on : 20th December 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக, விருத்தாசலம் நீதிமன்றத்தில் தேமுதிக இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் திங்கள்கிழமை ஆஜரானார்.
     2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி, விருத்தாசலம் பாலக்கரையில் தேமுதிக வேட்பாளர் பி.முத்துக்குமாரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் பிரசாரம் செய்தார். அதே பகுதியில் திமுகவை ஆதரித்து நடிகர் வடிவேலுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
     இருவரும் ஒரே நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதன்பேரில், விருத்தாசலம் போலீஸார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியதாகவும், அப்போதைய தேமுதிக நகரச் செயலர் சங்கர், வேட்பாளர் முத்துக்குமார், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
     இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக எல்.கே.சுதீஷ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். மேலும், வழக்கில் தொடர்புடைய பி.முத்துக்குமார், சங்கர் உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
     வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 4-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai