சுடச்சுட

    

    திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் கே.எம்.செந்தில்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 1999-ஆம் ஆண்டு இதே கிராமத்தைச் சேர்ந்த 51 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை இதுவரை அளவீடு செய்து தரவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
     இந்த நிலையில் எங்களது இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர். இதனால் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்துதர வேண்டும். மேலும், தனி நபர்களின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
     இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai