சுடச்சுட

    

    போயஸ் தோட்ட வீட்டை ஜெயலலிதா நினைவில்லமாக அறிவிக்கக் கோரிக்கை

    By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போயஸ் தோட்ட வீட்டை ஜெயலலிதா நினைவில்லமாக அறிவிக்க வேண்டும் என அம்பேத்கர் இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
     அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், கடலூரில் மாவட்டத் தலைவர் சி.எஸ்.செங்கல்ராவ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைமை நிலையச் செயலர் ஸ்ரீ.ராகுல், மாநில விவசாய அணிச் செயலர் ர.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் கருத்துரை வழங்கினார்.
     கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் வீட்டினை தமிழக அரசு அவரது நினைவில்லமாக அறிவிக்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகள் தாராளமாக கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்திட நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     கூட்டத்தில் மாவட்டச் செயலர் நா.வெற்றிவேல், மாநில பொதுச் செயலர் த.மெய்யழகன், செய்தித் தொடர்பாளர் ரா.சத்தியசீலன், பொதுக்குழு உறுப்பினர் நா.பக்கிரிசாமி, நிர்வாகிகள் வி.நம்பியார், எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     முன்னதாக வடக்கு மாவட்டச் செயலர் டி.ராமு வரவேற்க, தொழிலாளர் அணி செயலர் டி.பாலமுருகன் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai