சுடச்சுட

  

  ஆணையங்குப்பம் கிராமத்தில், மயானத்துக்கு பாதை கோரி அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
   கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புவனகிரி வட்டம், பெரியகுமட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆணையங்குப்பம் கிராமத்தினர், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில், ஆணையங்குப்பம் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மயானத்துக்குச் செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறோம். எனவே, பாதைக்கான உரிய இடத்தை பெற்றுத்தர வேண்டும். மேலும் அந்த விடத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
   கிராமத்தைச் சேர்ந்த வை.முத்துலட்சுமி, தி.ரவிச்சந்திரன், ஜி.ஷண்முகம், எம்.மகேஸ்வரி, வி.இளவரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai