சுடச்சுட

  

  வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  By கடலூர்,  |   Published on : 20th December 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி, விருத்தாசலத்தில் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 17 லட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, உளுந்து, முத்துசோளம், மணிலா, பருத்தி ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த மாவட்டம் சுனாமி, நீலம், தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.
   நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், மானாவாரி பயிர்கள் கருகியுள்ளன. ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீரூற்றும் கிடைக்காததால், பாசன விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாக கைவிடப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து, கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
   இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக ஜனநாயக விவசாயிகள் சங்கம், மணிமுத்தாறு நீர்ப் பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமுத்தாறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் விவசாயிகள் விருத்தாசலம் கோட்டாட்சியர் கே.எம்.செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai