சுடச்சுட

  

  ஆதார் அட்டை பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வி.சி.க. கோரிக்கை

  By கடலூர்/நெய்வேலி,  |   Published on : 21st December 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதார் அடையாள அட்டை பெறும் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் எளிமைப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
   அந்தக் கட்சியின் கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி செயற்குழுக் கூட்டம் திருப்பாதிரிபுலியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொகுதிச் செயலர் மு.அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.
   நிர்வாகிகள் ஆறு.சுகுமாறன், ப.நாகவேந்தன், ஏ.ராஜதுரை, ஆ.சேதுராமன், வே.புரட்சிவளவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் கருத்துரை ஆற்ற, கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினர்.
   கூட்டத்தில், டிச.28-இல் புதுச்சேரியில் நடைபெறும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது. மாவட்டத்தில் இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்களுக்கு, அதனை எளிமையாக அளிக்கும் வகையில், கிராமங்களில் முகாம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   முன்னதாக நகர ஒருங்கிணைப்பாளர் மு.கிட்டு வரவேற்க, பொருளர் ப.கோபால் நன்றி கூறினார்.
   இதேபோல, அக்கட்சியின், அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் அண்ணாகிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலர் கலியபெருமாள் தலைமை வகித்தார். கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
   மாவட்டச் செயலர் முல்லைவேந்தன், முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழருவி ஆகியோர் பேசினர். ஒன்றியப் பொருளர் பாபு, துணைச் செயலர்கள் பிரகாஷ், பிரபு, குமரன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கோவிந்த் வரவேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai