சுடச்சுட

  

  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய சிஐடியு வலியுறுத்தல்

  By நெய்வேலி,  |   Published on : 21st December 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
   நெய்வேலியில் சிஐடியு இரண்டாம் சுரங்கப் பகுதி பேரவைக் கூட்டம், சங்க அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. பகுதிச் செயலர் ஏ.பெருமாள் தலைமை வகித்தார். பகுதிச் செயலர்கள் என்.வீராசாமி, ஆர்.ராஜேந்திரன், சேவியர் வின்சென்ட், அன்பழகன், சுந்தர், அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   பகுதிச் செயலர் ஜீவகாருண்யன் வரவேற்றார். சுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
   கடந்த 3 ஆண்டுகளுக்கான வேலை அறிக்கையை வி.குமார் சமர்ப்பித்தார்.
   சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் தொடக்கவுரை நிகழ்த்தினார். பொதுச் செயலர் டி.ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, பொருளர் எம்.சீனுவாசன், நகரச் செயலர் திருஅரசு, துணைத் தலைவர்கள் மணி, வேளாங்கண்ணி, பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.கருப்பையன் நிறைவுரையாற்றினார்.
   கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
   சுரங்கம் 2-இல் மேல்மண் நீக்கம் மற்றும் நிலக்கரி வெட்டும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், மற்ற பணிகளில் உள்ள அவுட்சோர்ஸிங் கம்பெனிகளை வெளியேற்ற வேண்டும். அனைத்து பென்ஞ், யார்டு சாலைகளையும் தரமாக அமைக்க வேண்டும்.
   சொசைட்டி, ஹவுசிகாஸ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாள்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை இரண்டாம் சுரங்க வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai