சுடச்சுட

  

  கடலூரில் "அம்ருத்' திட்டத்தில் 2 புதிய பூங்காக்கள்: ரூ.2.14 கோடி நிதி ஒதுக்கீடு

  By கடலூர்,  |   Published on : 21st December 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "அம்ருத்' திட்டத்தின் கீழ், கடலூரில் 2 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காகவும், பழைய பூங்கா மேம்பாட்டுப் பணிக்காகவும் ரூ.2.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
   மத்திய அரசு, "ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைத் தொடர்ந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள் வளர்ச்சி அடையவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், "அம்ருத்' (அஙதமப-அற்ஹப் ஙண்ள்ள்ண்ர்ய் ச்ர்ழ் தங்த்ன்ஸ்ங்ய்ஹற்ண்ர்ய் ஹய்க் மழ்க்ஷஹய் பழ்ஹய்ள்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய்) திட்டத்தை அறிவித்துள்ளது.
   இந்தத் திட்டத்தை 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ்
   இந்திய அளவில் 500 நகரங்கள் ரூ.50,000 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. இதில், கடலூர் நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவுத் திட்டங்கள் நகராட்சியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பூங்கா சீரமைப்பு மற்றும் புதிய பூங்காக்கள் உருவாக்கத்துக்காக ரூ.2.14 கோடி நிதி வரப்பெற்றுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் நகராட்சியில் தற்போதுள்ள சுப்பராயலு பூங்காவில் ரூ.65 லட்சத்தில் நடைபாதை சீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் வரதராஜன் நகர், வில்வநகர் பகுதிகளில் புதியதாக பூங்கா அமைப்பதற்காக தலா 50 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
   இதில் வரதராஜன் நகரில் ஏற்கெனவே செயல்பட்டு, தானே புயலால் உருக்குலைந்த பூங்காவை புதிதாக உருவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வில்வநகரில் ரூ.92 லட்சத்தில் புதிய பூங்கா உருவாக்கப்படுகிறது. இதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
   புதிதாக அமைக்கப்படும் பூங்காவில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, இருக்கைகள், அலங்கார மின் விளக்குகள், பூச்செடிகள் இடம்பெறும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai