சுடச்சுட

  

  கடலூருக்கு ரூ.2.50 கோடிக்கு புதிய ரூ.500 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை வந்தன.
   மத்திய அரசால் உயர்மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டன. இதற்குப் பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள், ஏடிஎம்களில் விநியோகம் செய்யப்பட்டு வந்தபோதும், புதிய ரூ.500 நோட்டுகள் போதிய அளவில் விநியோகம் செய்யப்படவில்லை. டிசம்பர் மாத தொடக்கத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் சில லட்சம் வரை மட்டுமே வங்கிகளில் விநியோகிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
   இந்த நிலையில், கடலூர் கோட்டத்திலுள்ள இந்தியன் வங்கிகளில் விநியோகம் செய்வதற்காக புதிய ரூ.500 நோட்டுகள், ரூ.2.50 கோடி செவ்வாய்க்கிழமை பெறப்பட்டதாக இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வங்கிகளில் புதன்கிழமை (டிச.21) முதல் விநியோகிக்கப்படும்.
   அதேபோல் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கும் ரூ.2 கோடிக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் சில்லறைத் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai